ஆறில்
குடும்பம் இனிக்கும்
உலகம்
அச்சுறுத்தும்
பன்னிரண்டில் கல்வி
கசக்கும்
விளையாட்டு இனிக்கும்
பதினெட்டில் காதல்
இனிக்கும்
குடும்பம் கசக்கும்
மனைவி
தேவைப்படும்
முப்பதில் குழந்தை இன்பம்
தரும்
பணம்
தட்டுப்பாடாகும்
நாற்பத்திரெண்டில் அறிவு
முதிரும்
அனுபவம் தேவைப்படும்
நாற்பத்தெட்டில் அனுபவம் பயந்தரும்
குடும்பம் கசக்கும்
ஐம்பத்து நான்கில் பிள்ளைகள் தொல்லை
வேலை
பெரும்
சுமை
அறுபதில் பேரர்கள் பேரின்பம்
மனைவியின் துணை
தேவை
அறுபத்தாறில் வாழ்வின் இரைமீட்டல்
நிறைவேறாக் கனவுகளின் துயர்
எழுபத்திரெண்டில் உடல்
சுமையாகும்
உள்ளம்
கலங்கும்
எழுபத்தெட்டில் உலகம்
எமை
வெறுக்கும்
உறவுகள் தேவைப்படும்
எண்பத்து நான்கில் உலகை
நாம்
வெறுப்போம்
பிரியப் போகும்
துயர்
சூழும்