
ரஷ்யாவின் 'Pearls of the Sky' ஸ்கை டைவிங் குழுவை சேர்ந்த 101 பெண்கள் விமானத்திலிருந்து குதித்து, வானத்தில் மிகப்பெரிய பூ வடிவத்தை உருவாக்கும் முயற்சியில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.
ரஷ்யாவை சேர்ந்த 101 பெண்கள் வீராங்கனைகள் நடு வானில் இருந்து குதித்து புதிய சாதனையை படைத்துள்ளனர்.
விமானத்தில் மூலம் நடு வானுக்கு சென்ற அவர்கள் 101 பேரும் அங்கிருந்து குதித்து பூ வடிவில் கீழே இறங்கினர். சரியான நேர இடைவெளியில் நடத்தப்பட்ட இந்த சாகசம் பார்ப்போரின் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதே போன்ற சாகசத்தை 88 ஸ்கை டைவிங் குழுவினரை வைத்து இந்த 'Pearls of the Sky' ஸ்கை டைவிங் குழுவினர் சாதித்திருந்தனர்.